அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும்! ராதாகிருஷ்ணன் விளக்கம்!

அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும்! ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Update: 2021-03-26 16:41 GMT

கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகளவில் அதிரித்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 2வது அலையாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்த செய்திக் குறிப்பில்,  பொதுமக்கள் அலட்சியத்துடன்  முகக்கவசம் அணியாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்புக்கள் குறைந்தாலும் முற்றிலும் கொரோனா ஒழிக்கப்படவில்லை என்பதை மக்கள் மறந்து விடக் கூடாது என்றார்.

மேலும், நல்ல செய்தியாக, உருமாறிய கொரோனா இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என்றும், தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக  மருத்துவமனையை அணுகாததே தொற்று அதிகரிப்பதற்கு காரணம் என்றார். தமிழகத்தில் பரிசோதனை அதிகரிக்க உள்ளதால், தினசரி பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம்.  தமிழகத்தில் கொரோனாவை படிப்படியாக  குறைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் முழுஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். 

தமிழகத்தில் இதுவரை 25 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News