அதிர்ச்சி! அண்ணா பல்கலை ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா!
அதிர்ச்சி! அண்ணா பல்கலை ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா!
தமிழகத்தில் கொரோனா அசுரவேகமெடுத்து பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் அலையினை விட இரண்டாவது அலையில் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலை இணைப்பு அங்கீகாரத்தின் கீழ் மாநிலம் முழுவதும் சுமார் 550 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு சென்று தங்களது பணியை செய்து வரும் நிலையில் பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டம் கூட கூடாது எனவும், அலுவலக இருக்கைகளை 6 இடைவெளியில் அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.