அதிர்ச்சி! உ.பி முதல்வருக்கு கொரோனா ! முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்
அதிர்ச்சி! உ.பி முதல்வருக்கு கொரோனா ! முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்
இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்த போதிலும் சாமானிய மக்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் வரை கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
शुरुआती लक्षण दिखने पर मैंने कोविड की जांच कराई और मेरी रिपोर्ट पॉजिटिव आई है।
— Yogi Adityanath (@myogiadityanath) April 14, 2021
मैं सेल्फ आइसोलेशन में हूं और चिकित्सकों के परामर्श का पूर्णतः पालन कर रहा हूं। सभी कार्य वर्चुअली संपादित कर रहा हूं।
இதுகுறித்து அவர் தம்முடைய டுவிட்டர் பதிவில் ''தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். இதில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் ஆலோசனையைப் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்வதுடன் தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in