அதிர்ச்சி! சென்னையில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா உறுதி!

அதிர்ச்சி! சென்னையில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா உறுதி!

Update: 2021-06-23 18:14 GMT

தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் கொரோனா தொற்றின் 2வது அலை குறையத் துவங்கியுள்ளது. மக்கள் ஊரடங்கில் இருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியாக, சென்னையில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


கொரோனா தொற்றின் 2ம் அலையில் கொரோனா வைரஸ்அதிக வீரியமுள்ளதாக உருமாறியுள்ள நிலையில், அந்த வைரஸுக்கு டெல்டா வைரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் முதன் முறையாக ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News