தகவல் பரிமாற்ற தொடர்பு தளங்களில் முகநூல் பக்கங்களை பயன்படுத்துபவர்கள் கணிசமாக உள்ளனர். சமீபமாக முகநூல் பயன்படுத்துபவா்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இவை அனைத்தும் இணையவழியில் கசியவிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தையும், ஹேக்கிங் செய்யும் வலைதள கும்பல்கள் வெளியிட்டிருக்கலாம் என  இணைய பாதுகாப்பு நிறுவன அதிகாரி  ஆலன் கல்  தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி உலக அளவில் முகநூல் பக்கத்தை பயன்படுத்துபவா்கள் சுமார் 53.3 கோடி பேர். இவர்களின் பெயா்கள், மொபைல் எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இணைய வழியில் திருடப்பட்டு சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது..

அமெரிக்காவில் 3.23 கோடி,பிரிட்டனில் 1.15 கோடி , ஆஸ்திரேலியாவில் 73 லட்சம் பேர், இந்தியாவில் 61 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. விளம்பரங்கள், சந்தைப்படுத்துதலுக்கு மட்டுமின்றி இணையவழி மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கும் இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படலாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 
இதுகுறித்து முகநூல் நிறுவனம் விடுத்த செய்திக்குறிப்பில் 2019ல் வெளியான பழைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரச்சனைக்கு அப்போதே  தீா்வு கண்டறியப்பட்டுவிட்டது எனத் தெரிவித்துள்ளது. 

Tags: