அதிர்ச்சி! 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!!

அதிர்ச்சி! 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!!

Update: 2021-12-26 10:30 GMT

மதுபோதையில் தந்தை ஒருவர் 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த 37 வயது நபர் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில், மதுபோதையில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவரது 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வீட்டிற்கு மனைவி வந்ததும், அவரிடம் பாதிக்கப்பட்ட மகள் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியுற்ற சிறுமியின் தாயார், காவல் நிலையத்தில் கணவர் குறித்து புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த காவல் துறையினர் அவரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து, அந்த நபர், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பல்லடம் துணை சிறையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

 

Similar News