அதிர்ச்சி! இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய்!!
அதிர்ச்சி! இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய்!!
கருப்பு, வெள்ளை, மஞ்சை பூஞ்சை நோய்களுக்கு மத்தியில் தற்போது இந்தியாவிலேயே முதல்முறையாக தோல் பூஞ்சை கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தில் 50 வயது நபருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டனர். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து உரிய கண்காணிப்புடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்மூலம் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருந்தது தெரியவந்தது. உடனே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூடுதல் சிகிச்சை தேவைப்படுவதாக கூறி மைசூர் அரசு காது, மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
அப்போது அவருக்கு தோல் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. கொரோனா நோயாளி களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கப்பட்டு வந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அவர் மைசூருவில் உள்ள காது, மூக்கு பிரிவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் இதனால் மக்கள் அச்சப்படதேவையில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் என்றும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் வேறு எந்த வகையிலும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தாது, அதனால் யாரும் பயப்பட தேவையில்லை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
newstm.in