அதிர்ச்சி! நண்பர்களின் வாக்குவாதம் இரட்டை கொலையில் முடிந்த கொடூரம்!!
அதிர்ச்சி! நண்பர்களின் வாக்குவாதம் இரட்டை கொலையில் முடிந்த கொடூரம்!!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே வாக்குவாதம் காரணமாக இளைஞர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரதாப் (23), புதூர்மேட்டை சேர்ந்த சஞ்சய் (18), பிரசாந்த் (19), பரத்ராஜ் (19) ஆகிய 4 பேரும் நண்பர்கள். இவர்கள் கடந்த ஞாயிற்று அன்று புதூர்மேடு வார சந்தைக்கு அருகில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சஞ்சய் தான் கையில் வைத்திருந்த கத்தியால் பிரதாப்பை குத்தியுள்ளார். தடுக்க முயன்ற பிரசாந்த்தையும் குத்தினார்.
பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரதாப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சஞ்சய், பரத்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் போலீஸார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி கிராம சாலைமறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்தணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன், ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்தர் குமார் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in