அதிர்ச்சி! சென்னை மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!
அதிர்ச்சி! சென்னை மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!
சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடுமையாக சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. அந்த வகையில் தற்போது அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் கணையம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி சிகிச்சை பெற்று வந்தார். சிறுமியை அவரது தாய் உடன் இருந்து பார்த்துக் கொண்டார்.
இந்நிலையில் சிறுமியின் தாய் மருத்து வாங்க சென்றிருந்த போது அங்கு வந்த மருத்துவமனை உணவக ஊழியர் மோனா ராம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
அந்த இளைஞர் உத்திரப்பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்தவர். அச்சிறுமி கூச்சலிட்டதை அடுத்து, மோனா ராம் அங்கிருந்து வெளியேறினார். தாய் வந்ததும் நடந்ததைக் கூறி சிறுமி அழவே, சிறுமியின் தாய் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரளித்தார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் காவல் துறையினர் மோனா ராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in