அதிர்ச்சி! அரசு மருத்துவமனையில் குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள்!!

அதிர்ச்சி! அரசு மருத்துவமனையில் குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள்!!

Update: 2022-01-19 06:45 GMT

திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு பின்புறம் குவியல் குவியலாக மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டிவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் விபத்து, தற்கொலை முயற்சி, தீக்காயங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவிற்கு பின்புறமுள்ள பகுதியில் அதிக அளவிலான குப்பைகளும், குளுக்கோஸ் பாட்டில்களும், காலணிகளும், மருத்துவ கழிவுகளும் பாலிதீன் பைகளில் வைக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்,கொசுக்களும், ஈக்களும் அதிக அளவில் உள்ளது. இதேபோல் எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் முடநீக்கியல் துறைக்கு பின்புறமும் சேதமடைந்த படுக்கைகள், தலையணைகள் மற்றும் குப்பைகள் அப்புறப்படுத்தபடாமல் உள்ளது

பொங்கல் விடுமுறை காரணமாக குப்பைகளை எடுக்க மாநகராட்சி வாகனங்கள் வரவில்லை, விரைவில் முழுவதும் அகற்றப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News