அதிர்ச்சி! குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!!

அதிர்ச்சி! குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!!

Update: 2021-12-13 07:30 GMT

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வறுமை காரணமாக விஷம் கொடுத்து குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த சாய்குமார் – சுவாதி தம்பதிக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். மென்பொறியாளராக இருந்த சுவாதிக்கு கொரோனா தொற்று காரணமாக வேலை பறிபோனதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர் வீட்டு வேலைகளுக்குச் சென்று வந்துள்ளார். அவரது கணவர் கால் சென்டரில் வேலை செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து கணவன், வீட்டில் இல்லாதபோது சுவாதி தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்பு சுவாதி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

அதில், கணவருக்குச் சரியான வேலை கிடைக்காததால் கடன் பிரச்னை அதிகரித்தது. குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Similar News