அதிர்ச்சி! தமிழகத்தில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி!!
அதிர்ச்சி! தமிழகத்தில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி!!
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் எலும்பு வங்கியை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரானுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். அவர்களது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 200க்கும்அதிகமானோர் ஒமைக்ரான் கொரோனா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் கொரோனா திரிபு இதுவரை 100 நாடுகளுக்கு பரவியுள்ளது.
டெல்லியில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
newstm.in