அதிர்ச்சி! இனி உயர் நீதிமன்றத்திற்குள் அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதி!
அதிர்ச்சி! இனி உயர் நீதிமன்றத்திற்குள் அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதி!
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர் அலுவல் அறைகள் கடந்த 300 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தன. தற்போது மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கொரோனா மீண்டும் உருவெடுத்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் இனி மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே நேரடியாக நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மற்ற வழக்கறிஞர்கள் காணொலி மூலமாகவும் மட்டுமே ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 8ஆம் தேதி முதல், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனவும், வழக்கறிஞர் அறைகள் மூடப்படும் எனவும் தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனடையே இந்த நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்களின் அறைகளை மீண்டும் மூடுவதால் நீதிமன்றப் பணிகளும் வெகுவாக பாதிப்படையும், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் என அச்சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மார்ச் 8ஆம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட இருப்பதாகவும் அவர் கூறினார்.
newstm.in