அதிர்ச்சி! குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்!!

அதிர்ச்சி! குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்!!

Update: 2021-12-07 07:15 GMT

கடன் பிரச்னை காரணமாக தஞ்சையில் மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு பெற்றோர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலவெளி மனோ நகரைச் சேர்ந்த ராஜா (38) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன் திருவையாறில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா (32). மகன் ஸ்ரீவத்சன் (11) 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.

புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரர் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோவில் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸாரிடம் வினோத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, கள்ளப்பெரம்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது குடும்பத்துடன் ராஜா இறந்து கிடந்தார். மூவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராஜாவுக்கு தொழிலில் கடன் அதிகரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்றார். ஆனால் வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணம் ராஜாவுக்கு வந்து சேரவில்லை.

இதனிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தன் மனைவியுடன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

newstm.in

Similar News