அதிர்ச்சி! கொரோனா தடுப்பூசி போடப்படுவது நிறுத்தம்! நெதர்லாந்தில் பரபரப்பு!

அதிர்ச்சி! கொரோனா தடுப்பூசி போடப்படுவது நிறுத்தம்! நெதர்லாந்தில் பரபரப்பு!

Update: 2021-03-17 19:17 GMT

உலகம் முழுவதும்  கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் வேளையில் பல நாடுகள் அவசரகால பயன்பாட்டுக்கு  தடுப்பூசிகள் செலுத்த ஒப்புதல் அளித்துள்ளன. அந்த வகையில் அனுமதி அளிக்கப்பட்ட தடுப்பூசிகளில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று.

இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் பல பக்க விளைவுகள் உருவாவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து சில நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளது. அந்த வகையில் டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் ரத்தம் உறைதல் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக காரணங்கள் தெரிவித்து இந்த தடுப்பூசிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வரும் மற்ற நாடுகளிலும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள்  எழுப்பப் பட்டுள்ளன.

நெதா்லாந்தில் பொதுமக்களுக்கு அஸ்டொஸெனகா தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் உருவாக்கியுள்ள இந்த  தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உருவாக சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளது எனவும், பயன்படுத்துவதில் எந்த அபாயமும் இல்லை எனவும்  உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு அறிவித்துள்ளது.இருந்த போதிலும் மார்ச் 29ம் தேதி வரை தடுப்பூசி செலுத்துவது நிறுத்தி வைக்கப்படுவதாக நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News