அதிர்ச்சி! பள்ளிச் சீருடையுடன் நடுரோட்டில் மோதிக் கொண்ட மாணவர்கள்!!
அதிர்ச்சி! பள்ளிச் சீருடையுடன் நடுரோட்டில் மோதிக் கொண்ட மாணவர்கள்!!
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாணவர்கள் பள்ளிச் சீருடையுடன் நடுரோட்டில் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்க , திடீரென்று ஒரு மாணவர் கிளம்புங்க என்று சொல்ல, சண்டையை நிறுத்திவிட்டு கிளம்பி விடுகிறார்கள். சண்டை நடக்கும்போதே ஒரு மாணவர் வீடியோ எடுக்க, இன்னொரு சிறிய வயது மாணவன் எதுக்கு அண்ணா இதை வீடியோ எடுக்குறீங்க என்று கேட்கிறார். இதுவும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
இதன் மூலம் மாணவர்களே இந்த சண்டையை வீடியாவாக எடுத்து வெளியிட்டது தெரியவருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி புதுச்சேரி மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்தியால்பேட்டை போலீசாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. புகார் வந்ததும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
newstm.in