அதிர்ச்சி ! மோடி குடும்பத்தில் வெடித்த திடீர் பிளவு !

அதிர்ச்சி ! மோடி குடும்பத்தில் வெடித்த திடீர் பிளவு !

Update: 2021-02-04 10:48 GMT

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர், இண்டிகோ விமானத்தில் லக்னோ விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் 100 பேர்  வந்துள்ளனர்.  ஆனால், அவரது ஆதரவாளர்களை விமான நிலையத்துக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக, அங்கேயே பிரகலாத் மோடிக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அதிகாரிகள் தங்கள் தரப்பில் உறுதியாக இருந்தனர்.

இதனால் ஆவேமான பிரகலாத் மோடி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர், பின்னர் தானாகவே, போராட்டத்தை கைவிட்டு புறப்பட்டுச் சென்றனர். 

முன்னதாக, லக்னோ விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  பிரகலாத் மோடி,நான் லக்னோ வருவதை அறிந்து, என்னை வரவேற்க எனது ஆதரவாளர்கள் விமான நிலையம் வந்துள்ளனர். அவர்களை காரணம் இன்றி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது புதிய வழக்கு பதிவு செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின்படியே அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவு நகலை காட்டாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்போவதாக பிரகலாத் மோடி தெரிவித்தார்..

பிரதமர் மோடிக்கும், அவரது சகோதரர் பிரகலாத் மோடிக்கும் இடையே மிகப்பெரிய மன வருத்தமும், பிரிவும் ஏற்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரத்தில் தீயாக தகவல் பரவிவருகிறது.

Tags:    

Similar News