அதிர்ச்சி! 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்த மகள் !!

அதிர்ச்சி! 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்த மகள் !!

Update: 2021-02-02 06:10 GMT

ஜப்பான் நாட்டில் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை ஒருவர் ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருபவர் யூமி யோஷினோ. இவர் முறையாக வாடகை செலுத்தவில்லை என்ற காரணத்தால் குடியிருப்பிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து, அந்த பெண் தாங்கி இருந்த  வீட்டை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர், அங்கிருந்த  ஃப்ரீசர் பாக்ஸை திறந்து பார்த்தபோது அவருக்கு கடும் அதிர்ச்சி அடைந்தார். 

காரணம், ஃப்ரீசரை திறந்ததும் உறைந்துபோன நிலையில் மனித சடலம் ஒன்று இருந்தது கண்டு அலறிவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குவிரைந்து வந்த போலீஸ் விசாரணை நடத்தினர். இதில் ஃப்ரீசரில் இருந்த சடலம் யூமி யோஷினோவின் தாயார் என்று தெரியவந்தது.

இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் யூமி யோஷினோ கூறுகையில், அவர் வசித்துவந்த பிளாட் அவரது தாயாரின் பெயரிலேயே இருந்ததாகவும், அவர் உயிரிழந்தது தெரிந்தால், அந்த வீட்டை காலி செய்ய சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சடலத்தை ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஜப்பான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News