அதிர்ச்சி! பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்!! VIDEO

அதிர்ச்சி! பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்!! VIDEO

Update: 2022-01-29 18:47 GMT

பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்து துன்புறுத்தியதற்காக தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவொன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலதரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்துவந்தன.

வீடியோவை, பள்ளியை சேர்ந்த பிற மாணவர்கள் தங்களின் மொபைலில் ஜன்னல் வழியாக பதிவு செய்திருக்கின்றனர். வீடியோ எடுப்பது அறிந்த பின், சம்பந்தப்பட்ட மாணவி மறைந்துக்கொள்ள முயல்கிறார். அதேநேரம் அந்த தலைமை ஆசிரியர் ஜன்னலை நோக்கி வருவதும் பதிவாகி உள்ளது.


சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அவர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

newstm.in

Similar News