அதிர்ச்சி! மாணவியின் ஆடையை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை!!

அதிர்ச்சி! மாணவியின் ஆடையை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை!!

Update: 2022-01-07 17:14 GMT

பள்ளிக்கு செல்போன் எடுத்துச் சென்ற மாணவியின் ஆடைகளை அவிழ்த்து ஆசிரியை துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே கனங்கூர் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சினேகலதா என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்போன் எடுத்து சென்றுள்ளார். வகுப்பறையில் அவர் செல்போனுடன் இருந்ததை பார்த்த ஆசிரியை சினேகலதா மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் அந்த மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மாணவியிடம் தவறாக நடந்து ஆடைகளை அவிழ்த்த ஆசிரியைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவது தவறான செயல்தான் என்றாலும் கூட 10ஆம் வகுப்பு மாணவியை ஆடைகள் அவிழ்ந்து சோதனையிட்டது சட்டத்திற்கு புறம்பானது, மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News