அதிர்ச்சி! இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இறந்த இரண்டு நாட்களிலேயே தங்கையும் இறந்த சோகம்!

அதிர்ச்சி! இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இறந்த இரண்டு நாட்களிலேயே தங்கையும் இறந்த சோகம்!

Update: 2021-03-17 16:04 GMT

அண்மையில் காலமான பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் தங்கை லட்சுமி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். எஸ்.பி. ஜனநாதன் இறந்த இரண்டு நாட்களிலேயே அவரது தங்கையும் மரணமடைந்தது திரைத்துறையினரையும், உறவினர்களையும் அதிர செய்துள்ளது. எஸ்.பி.ஜனநாதனின் மறைவின் போது, அவரின் அருகிலேயே  அமர்ந்திருந்த லட்சுமி மயக்க நிலையை அடைந்திருந்த நிலையில் இந்த சோகம் நடந்துள்ளது. அவர் மாரடைப்பால் காலமானார்.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களிலேயே சோகம் தாங்காமல் அவரது தங்கை ல‌ஷ்மியும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை நிலைகுலைய செய்துள்ளது. 
 

Tags:    

Similar News