அதிர்ச்சி..!! கொரோனா 3-ம் அலை அக்டோபரில் உச்சத்தை அடைய வாய்ப்பு..!
அதிர்ச்சி..!! கொரோனா 3-ம் அலை அக்டோபரில் உச்சத்தை அடைய வாய்ப்பு..!
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் கொரோனா இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், டெல்டா ப்ளஸ் வகை கொரோனா தொற்றால் 3-வது அலை உருவானால் அக்டோபர் நவம்பரில் உச்சநிலையை அடையும் என்றும், அது இரண்டாம் அலையின் உச்சநிலையைவிடப் பாதியாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசின் வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள மணீந்திர அகர்வால் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் 3-ம் அலை உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதுள்ளதைவிட 25 சதவீதம் அதிகப் பரவல் வேகம் கொண்ட புதிய தொற்று ஆகஸ்டில் பரவத் தொடங்கினால் அக்டோபர் நவம்பரில் உச்சநிலையை எட்டும் என்றும், 2-ம் அலையின் உச்சத்தைவிடப் பாதியாக ஒருநாளில் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை பாதிப்பு இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது அலையின்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றும் மற்றொரு வல்லுநரான வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.