அதிர்ச்சி !! ஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு கொரோனா !!

அதிர்ச்சி !! ஒரே நாளில் 421 ராணுவ வீரர்களுக்கு கொரோனா !!

Update: 2021-04-14 20:35 GMT

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் அலையை காட்டிலும் 2வது அலையில் கொத்து கொத்தாக பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ராணுவ பிரிவினர் பலருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதில்  ஒரே நாளில், துணை ராணுவ படைப் பிரிவுகளைச் சேர்ந்த 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.பி.எஸ்.எப். ராணுவ பிரிவினரில் 311 பேருக்கும், சி.ஐ.எஸ்.எப் படைப்பிரிவினரில் 43 பேருக்கும்,சி.ஆர்.பி.எப். பிரிவில், 28 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் துணை ராணுவத்தில் இதுவரை 55929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்,  53514 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துவிட்டதாகவும் ராணுவ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. கொரோனாவால் உயிரிழந்த ராணுவ வீரர்கள்  208பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News