அதிர்ச்சி.. இந்திய கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை ஹேக் செய்ய முயற்சித்த சீனா!
அதிர்ச்சி.. இந்திய கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை ஹேக் செய்ய முயற்சித்த சீனா!
சீனாவை சேர்ந்த ஹேக்கிங் குழு இந்திய கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை ஹேக் செய்ய முயற்சி செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியையும், பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்துள்ளன. இந்த இரண்டு மருந்துகளும் ஜனவரி 16 முதல் செலுத்தப்பட்டு வருகின்றன.
முதலில் சுகாதாரப்பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்ட தடுப்பூசி, தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு அதிகமான இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் நட்பின் அடிப்படையில் அண்டை நாடுகளுக்கும், வணிக ரீதியில் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பு மருந்து அனுப்பி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தோன்றியதாக கருதப்படும் சீனா இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை ஹேக் செய்ய முயற்சி செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீன அரசுக்கு பின்னால் இருக்கும் குழு ஒன்று சீரம் மற்றும் பாரத் பயாடெக் நிறுவனங்களின் தொழில்நுட்ப தகவல்களை ஹேக் செய்ய முயற்சி செய்துள்ளது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சீனா ஹேக் செய்ய முயற்சி செய்துள்ளது.
இந்தியாவை போன்று சீனாவும் தடுப்பூசி தயாரித்து வருகிறது. ஆனால் சீனாவின் தடுப்பூசியை வாங்க எந்த நாடும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் சீனா இந்திய நிறுவனங்களின் தகவல்களை திருட முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே எல்லையில் பிரச்னை செய்துவரும் சீனா தடுப்பூசி விவகாரத்திலும் இந்தியா உடன் முரணாக நடந்து கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in