அதிர்ச்சி.. பிரதமரை தொடர்ந்து அதிபருக்கும் கொரோனா வைரஸ் உறுதி !!

அதிர்ச்சி.. பிரதமரை தொடர்ந்து அதிபருக்கும் கொரோனா வைரஸ் உறுதி !!

Update: 2021-03-30 07:40 GMT

பாகிஸ்தான் முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதன் ஒரு பகுதியாக, இம்ரான் கான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை தொடர்ந்து அந்நாட்டின் அதிபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஆரிஃப் ஆல்வியும் அவரது மனைவி சாமினா ஆல்வியும் சீன தயாரிப்பான சினோஃபார்ம் என்ற கொரோனா தடுப்பூசியை இருதினங்களுக்கு முன்பு எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதை அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார். அதில், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளேன். ஆனால் இரண்டாவது டோஸ் எடுத்தபிறகுதான் ஆன்டிபாடிகள் உடலில் அதிகரிக்கத் தொடங்கும். எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர், அதிபர் ஆகியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News