அதிர்ச்சி.. இந்தியாவில் மீண்டும் வேகமாக அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு !!

அதிர்ச்சி.. இந்தியாவில் மீண்டும் வேகமாக அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு !!

Update: 2021-02-22 13:45 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக இருந்தப்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா குறைய குறைய படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் இந்தியா வழக்கம்போல் முழு அளவில் செயல்பட தொடங்கியது. 

எனினும் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் தொற்று பரவியது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பபட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 6 ஆயிரம் என்ற அளவிலும் குறைந்தது.

இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,10,05,850-ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 9,695 போ் குணமடைந்தனா். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,06,99,410-ஆக அதிகரித்தது. 

கொரோனா தொற்றுக்கு மேலும் 83 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,56,385-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,50,055 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

நாடு முழுவதும் இதுவரை 1,11,16,854 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா தீவிரமாக பரவத் தொடங்கியதா என்ற அச்சம் எழுந்துள்ளது. 

newstm.in

 
 

Tags:    

Similar News