அதிர்ச்சி.. ஓய்வு பெறுகிறார் சிஎஸ்கே வீரர் மொயீன் அலி !!
அதிர்ச்சி.. ஓய்வு பெறுகிறார் சிஎஸ்கே வீரர் மொயீன் அலி !!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி ஓய்வு அறிவிக்கவுள்ளார்.
மொயின் அலி சர்வதேச அளவில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக உள்ளார். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் தற்போது அசத்தி வருகிறார். 34 வயதாகும் மொயீன் அலி இங்கிலாந்து அணிக்கா 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் இவர் 3வது சிறந்த ஆல் ரவுண்டராக உள்ளார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். எனினும் இவர் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வரும் மாதங்களில் வீட்டை விட்டு பிரிந்து நீண்ட காலம் வெளிநாட்டில் இருக்க வேண்டி வரும் என்று நினைக்கிறார். டி20 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் பிறகு ஆஷஸ் தொடருக்காகச் செல்ல வேண்டும். இப்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எமிரேட்சில் ஆடிவருகிறார் மொயீன் அலி.
இதனால் அவர் குடும்பத்தை நீண்ட காலம் பிரிந்திருக்கும் நிலை உள்ளதாக கருதுகிறார். இந்நிலையில் தனது ஓய்வு முடிவை இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட், கேப்டன் ஜோ ரூட் ஆகியோரிடம் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஓருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அவர் தொடர்ந்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் ஓபனிங் முதல் நம்பர் 9 வரை எங்கு வேண்டுமானாலும் மொயீன் அலியை இறக்கலாம். எனினும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுவதால் ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகத்திலேயே உள்ளனர்.
newstm.in