#BREAKING:- அதிர்ச்சி.. முன்னாள் முதல்வரின் பேத்தி தூக்குமாட்டி தற்கொலை..!

#BREAKING:- அதிர்ச்சி.. முன்னாள் முதல்வரின் பேத்தி தூக்குமாட்டி தற்கொலை..!

Update: 2022-01-28 15:06 GMT

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி. இவருடைய மகள் சவுந்தர்யா (30).

பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் சவுந்தர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது அவருக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில், மத்திய பெங்களூரு மவுண்ட் கார்மெல் கல்லூரி அடுக்குமாடி குடியிருப்பில் கணவருடன் வசித்து வந்த சவுந்தர்யா,  இன்று தனது குடியிருப்பின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News