அதிர்ச்சி.. அமெரிக்காவில் வங்கிக்கு சென்ற இந்தியர் சுட்டுக்கொலை !

அதிர்ச்சி.. அமெரிக்காவில் வங்கிக்கு சென்ற இந்தியர் சுட்டுக்கொலை !

Update: 2021-12-08 11:21 GMT

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகி வருகிறது. அவ்வப்போது பள்ளிகள், மால்கள், வீதிகள் என மக்கள் கூடும் இடங்களில் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். இதில் பலரும் உயிரிழக்கும் சோகம் ஏற்படுகிறது. இதனால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கிழக்கு கொலம்பஸ் நகரில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையத்தை நடத்தி வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் குமார் படேல்(45)

அமித் குமார் படேல் நேற்று முன்தினம் காலை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக தனது கியாஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்றார். அந்த வங்கியும் அவர் செல்லும் சாலையும் அவர் வழக்கமாக செல்லும் இடங்கள் தான்.

இந்த நிலையில், வங்கிக்கு சென்றப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், அமித் குமார் வங்கிக்குள் நுழைவதற்கு முன் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பின்னர் அந்த மர்ம நபர் அமித் குமார் வங்கியில் டெபாசிட் செய்ய வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News