வீடியோ கால்ல லைவ் சாட்! மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை!!
வீடியோ கால்ல லைவ் சாட்! மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை!!
22 வயது மாணவர் ஒருவர் விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் பெங்களூருவை சேர்ந்த விகாஸ் என்ற மாணவர் இரண்டாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் அவர் விடுதியின் மேல் மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. அதனை அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். ஆனால் அதற்குள் மாணவர் விகாஸ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த விகாஸ் மன நல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் யூட்யூப் லைவ்வில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in