5ம், 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்!

.முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் 5ம், 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது. 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-01-20 01:09 GMT

தமிழகத்தில் முதன்முறையாக இந்த கல்வி ஆண்டில், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் 5ம், 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது என்கிற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த மையங்களில் எந்தெந்த பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வு மைய பொறுப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரின் விபரங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, வினாத்தாள் அச்சிடப்பட உள்ளன. அவ்வாறு அச்சிடப்படும் வினாத்தாள்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பவும். அங்கிருந்து குறுவள மையம் (சிஆர்சி) அமைந்துள்ள பள்ளிகளுக்கு அனுப்பவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணி சம்பந்தப்பட்ட குறுவள மைய அளவில் நடைபெறும் எனவும், விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News