ஓடும் ரயிலில் அதிர்ச்சி..! பெண் கூட்டு பலாத்காரம் - 4 பேர் கைது..!
ஓடும் ரயிலில் அதிர்ச்சி..! பெண் கூட்டு பலாத்காரம் - 4 பேர் கைது..!
மும்பை நோக்கி சென்ற ரயிலில் ஏறிய கொள்ளையர்கள் 8 பேர், பயணிகளிடம் கொள்ளைடித்ததுடன் பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து மும்பையை நோக்கி புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. மும்பைக்கு 120 கி.மீ. தொலைவில் உள்ள லகத்புரி நகரின் அருகே ரயில் சென்ற போது, 8 கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஏசி பெட்டியில் ஏறியுள்ளனர். அதில் இருந்த பயணிகளிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த நகைகள் மற்றும் பணத்தை பறித்தனர்.
மேலும், பெண் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்தனர். அதை தடுக்க முயன்ற பயணிகளை ஆயுதங்களால் தாக்கினர். அதில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. கசாரா ரயில் நிலையம் வந்த போது, பயணிகள் அலறினர்.
இதையடுத்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், 4 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.