ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த வாலிபர்.. வந்தது என்ன தெரியுமா..?
ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த வாலிபர்.. வந்தது என்ன தெரியுமா..?
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தட்டாங்குளத்தைச் சேர்ந்தவர் அணில்குமார். இவர், ஆன்லைனில் ஒரு கைக்கடிகாரத்தை பார்த்துள்ளார். உடனே அதை வாங்குவதற்கு ஆர்டர் செய்தார்.
அத்துடன், ஆன்லைன் மூலம் அந்த கடிகாரத்திற்கான தொகையான 2 ஆயிரத்து 400 ரூபாயும் செலுத்தினார். அவருக்கு 15-ம் தேதி அந்த கடிகாரம் வந்து சேரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அணில் குமாருக்கு நேற்று முன்தினம் ஒரு பார்சல் வந்தது. உடனே அவர், தான் ஆர்டர் செய்த கைக்கடிகாரம்தான் வந்துள்ளது என்று நினைத்து அதை வாங்கி ஆவலுடன் பிரித்தார்.
அப்போது, பார்சலுக்குள் இருந்த ஒரு சிறிய அட்டைப் பெட்டிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாரண ஆணுறையும் இருந்தது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர், அந்த பார்சலை கொண்டு வந்த நபரிடம் கேட்டார்.
அதற்கு அவர், எனக்கு பார்சலை உங்கள் முகவரிக்கு கொண்டு கொடுக்கும் வேலைதான். ஆனால் அதில் ஆணுறை வந்தது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.
உடனே அவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அவர்கள் உரிய பதிலை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்த அனில் குமார், இந்த சம்பவம் குறித்து ஆலுவா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.