தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி!! சவரன் 34 ஆயிரத்தை கடந்தது!
தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி!! சவரன் 34 ஆயிரத்தை கடந்தது!
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டே செல்வதால் பெண்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.34,136க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.29 ஆக உயர்ந்து, ரூ.4,267 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு உயர்ந்திருப்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் ஆக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று மற்றும் இன்று அதிரடியாக உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதே போல் வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 68,700 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,300 உயர்ந்து 70,000 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது.