அதிமுகவுக்கு அதிர்ச்சி! துணை சபாநாயகர் மகனை கைது செய்ய அதிரடி உத்தரவு!

அதிமுகவுக்கு அதிர்ச்சி! துணை சபாநாயகர் மகனை கைது செய்ய அதிரடி உத்தரவு!

Update: 2021-04-03 12:48 GMT

தமிழகத்தில் தேர்தல் திருவிழாவில், அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் அனல் காற்றையும் விட சூடு பிடித்து நடந்து வருகிறது. இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்வதற்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ம் தேதி ஒக்கிலிபாளையத்தில் நடந்த அடிதடி வழக்கில், வன்முறையில் ஈடுபட்டதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உட்பட 7 பேரையும், திமுக தரப்பில் 4 பேரையும் கைது செய்வதற்கு கோவை எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வடக்கிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News