2014-ல் கட்டப்பட்ட 3 மாடி அடுக்குமாடி சீட்டுக்கட்டுப்போல் சரிந்ததால் அதிர்ச்சி..!!

2014-ல் கட்டப்பட்ட 3 மாடி அடுக்குமாடி சீட்டுக்கட்டுப்போல் சரிந்ததால் அதிர்ச்சி..!!

Update: 2021-10-08 12:37 GMT

பெங்களூரு கஸ்தூரி நகர் பகுதியில் கடந்த 2014-ல் கட்டப்பட்ட 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 

இந்த அடுக்குமாடியில் தங்கியிருந்தவர்கள் கட்டிடம் திடீரென ஆடியதால் பூகம்பம் தான் வந்து விட்டதோ என நினைத்து படிக்கட்டுகளில் இறங்கி சாலைக்கு வந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சற்று நேரத்தில் சர சர வென முழு கட்டிடமும் இடிந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். 

தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்தனர். கட்டிடத்தை பார்வையிட்ட  பெங்களூரு மாநகராட்சி ஆணையர், இந்த கட்டிடம் 2 மாடிகளுக்கு மட்டுமே கட்ட பெங்களூரு மாநகராட்சி அனுமதி அளித்திருந்தது. ஆனால் அனுமதியை மீறி கூடுதலாக ஒரு தளத்தை கட்டியதின் காரணமாகவும் கட்டிடத்தை கட்ட தரமான பொருட்களை உபயோகப்படுத்தாத காரணத்தினாலும் இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவித்தார்.  

கடந்த 2 வாரத்தில் பெங்களூர் நகரில் மூன்றாவதாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News