அதிர்ச்சி சம்பவம்! அழுத குழந்தை.. ஆத்திரத்தில் அறிவிழந்த தாய்..!

அதிர்ச்சி சம்பவம்! அழுத குழந்தை.. ஆத்திரத்தில் அறிவிழந்த தாய்..!

Update: 2021-12-14 19:05 GMT

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பென்னி சேவியர். இவருடைய மனைவி பிளஸ்சி. இந்த தம்பதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருப்பதாகத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.


பதறியடித்து வீட்டிற்கு வந்த பென்னி, குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு பென்னி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தாய் பிளஸ்சியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது,  “சம்பவத்தன்று குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதனால் எரிச்சலடைந்து குழந்தையை சுவற்றில் தூக்கி எறிந்துவிட்டு துணி துவைக்கச் சென்றுவிட்டேன்.

பின்னர் வந்து பார்த்தபோது, குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. பிறகு கணவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, குழந்தை சுயநினைவு இல்லாமல் இருப்பதாகக் கூறினேன்” என விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் பிளஸ்சியை கைது செய்தனர்.

பெற்ற தாயே குழந்தையை சுவற்றில் எறிந்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News