அதிர்ச்சி சம்பவம்! ஆம்புலன்ஸில் சைரனை அலறவிட்டபடி வந்த புதுமண ஜோடி!!

அதிர்ச்சி சம்பவம்! ஆம்புலன்ஸில் சைரனை அலறவிட்டபடி வந்த புதுமண ஜோடி!!

Update: 2022-01-15 06:30 GMT

புதிதாக திருமணமான தம்பதி ஆம்புலன்ஸில் சைரனை அலறவிட்டபடி ஊர்வலமாகச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆலப்புழாவில் இச்சம்பவம் நடந்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதுபுதிதாக திருமணமான அந்த ஜோடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றிருக்கிறார்கள்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து ஆம்புலன்ஸின் உரிமையாளருக்கு மோட்டார் வாகனத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுமேலும் இந்த விவகாரம் மோட்டார் வாகனச் சட்டப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தன்னுடையை உரிமத்தை இழக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.

இது போன்ற செயல்கள் சட்டத்துக்கு விரோதமானது என விதி இருக்கிறது, ஆகையால் சம்மந்தபட்ட ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் கேரளாவின் சுகாதாரத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களின் கவனத்திற்கு சென்றிருப்பதாகவும், ஆம்புலன்ஸில் சென்றது தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் என்றும் தெரியவந்துள்ளது.

newstm.in

Similar News