அதிர்ச்சி வீடியோ!! வீட்டு வாசலில் படுத்திருந்த நாயை தூக்கிச் செல்லும் சிறுத்தை!!

அதிர்ச்சி வீடியோ!! வீட்டு வாசலில் படுத்திருந்த நாயை தூக்கிச் செல்லும் சிறுத்தை!!

Update: 2021-06-12 09:30 GMT

ஊரடங்கு காரணமாக வனப்பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனபோக்குவரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் சாலைகளுக்கு வரத்தொடங்கிவிட்டன. மேலும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் நுழைகிறது. 

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை நாய் ஒன்றை தூக்கிச்செல்லும் காட்சிகள் வெளியாகி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை வீட்டில் வளர்க்கும் நாயை கடித்து தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புசே என்ற கிராமத்தில் வீட்டு வாசலில் படுத்திருக்கும் நாயை, பின்னால் இருந்து வரும் சிறுத்தை வாயில் கவ்விக் கொண்டு செல்வது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

சிறுத்தை பிடியில் இருந்து அந்த நாய் தப்பமுடியவில்லை. இறுதியாக நாயை வாயால் கடித்து சிறுத்தை தூக்கிச்செல்கிறது. இந்த காட்சிகள் வெளியானதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


newstm.in

 
 

Tags:    

Similar News