பூங்காவில் துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் தொடரும் வன்முறை!
பூங்காவில் துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் தொடரும் வன்முறை!
அமெரிக்காவின் அதிபராக பைடன் பொறுப்பேற்ற பிறகு வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனையடுத்து துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அதிபர் பைடன் விதித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் பிரையலில் உள்ள ஒரு தொழில்துறை பூங்காவில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2 மணி நேரத்துக்குப் பிறகு சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் சிக்கியுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.