பற்றாக்குறை.. 18- 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணியை நிறுத்திய மாநில அரசு !!

பற்றாக்குறை.. 18- 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணியை நிறுத்திய மாநில அரசு !!

Update: 2021-05-25 17:15 GMT

பித்தோராகர் நகரத்தில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக  18  முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத்தீவிரமாக இருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓரளவுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் ஒரே மாதத்தில் சுமார் 30 ஆயிரத்தில் இருந்து கொரோனா பாதிப்பு ஆயிரமாக குறைந்துள்ளது. 

எனினும் ஊரடங்கால் கொரோனாவை கட்டுப்படுத்துவது தற்காலிகமானதே என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. ஆனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த பித்தோராகர் நகரம் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணியை நிறுத்திவிட்டது. இது குறித்து பேசிய மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி, எங்களிடம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு மட்டும் 7,500 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. ஆனால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்த தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை, அவர்களுக்கான தடுப்பூசிகள் கிடைத்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்குவோம் என்று அவர் கூறினார்.

மத்திய அரசு தான் மாநிலங்களுக்கு தடுப்பூசியை பகிர்ந்து கொடுக்கும் பணியை செய்து வருகிறது. ஆனால் ஒருசில மாநிலங்களுக்கு அதிகளவிலான தடுப்பூசியும் ஒருசில மாநிலங்களுக்கு குறைந்த தடுப்பூசியும் மத்திய அரசு வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

newstm.in


 

Tags:    

Similar News