நான் முதல்வராக வேண்டுமா..? மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள் - மம்தா
நான் முதல்வராக வேண்டுமா..? மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள் - மம்தா
மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பவானிப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், பவானிப்பூர் ஒரு ‘மின் இந்தியா’ ஆகும். பல்வேறு சமூகத்தினர் இங்கு வசிக்கின்றனர். இந்த தொகுதியில் நான் 6 முறை வெற்றி பெற்றுள்ளேன். நான் முதல்வராக தொடர வேண்டுமானால் மழை பெய்தால் கூட வீட்டை விட்டு வெளியே வந்து எனக்கு வாக்களியுங்கள் என்றார்.