தோள்பட்டை காயம்.. ஐபிஎல் தொடரில் இருந்தும் ஷ்ரேயஸ் விலகல் ?

தோள்பட்டை காயம்.. ஐபிஎல் தொடரில் இருந்தும் ஷ்ரேயஸ் விலகல் ?

Update: 2021-03-25 10:35 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயஸ் ஐயர். அண்மைக்காலமாக இவரது பேட்டிங் இந்திய அணிக்கு கைக்கொடுத்தது. தனது நேர்த்தியான பேட்டிங்கால் ரன்ரேட்டை உயர்த்தியும் வெற்றிக்கும் உதவிவந்தார். 

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் உள்ளார். இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் சந்தேகம் தான் என தெரிகிறது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பேட்டியில் பீல்டிங் செய்த போது ஐயருக்கு தோள்பட்டடை பகுதியில் காயம் ஏற்பட்டது. தொடக்கத்தில் சிறிய அளவிலான காயம் என ரசிகர்கள் கருதினார். ஆனால் அவரது கையில் எழும்பில் காயம் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அவ்வாறு அறுவைச் சிகிச்சை நடத்தினால் 4 மாதக்காலம் ஓய்வு எடுக்கவேண்டும். எனவே ஐபிஎல் போட்டிகளில் எதிர்வரும் சீசனில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.  இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் பீல்ட் செய்வதிலிருந்து அவர் விலகினார். இந்நிலையில் அவர் எஞ்சியுள்ள போட்டிகளிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இதனிடையே ஷ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் டெல்லி அணி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஒருவேளை இவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டிவ் சுமித் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.


newstm.in 
 

Tags:    

Similar News