பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளர்- கமலுக்கு பதில் இவரா..?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளர்- கமலுக்கு பதில் இவரா..?

Update: 2021-03-17 13:50 GMT

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதால், பிக்பாஸ் சீசன் 5-க்கான தொகுப்பாளரை நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம் மாற்ற முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன.

தாமதமாக துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 4-க்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், நிகழ்ச்சி தயாரிப்பு குழு தற்போது சீசன் 5-க்கான ஆரம்ப வேலைகளை துவங்கியுள்ளது. வரும் ஜூன் முதல் தொடங்கப்படவுள்ள இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் தமிழகத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்பது தெரியவில்லை.

இதனால் நிகழ்ச்சி தயாரிப்புக் குழு தொகுப்பாளாரை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவலை இதுவரை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யவில்லை.

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான ஜோடி நெம்பர் ஒன் நிகழ்ச்சியில் மூன்று நடுவர்களில் ஒருவராக சிம்பு இருந்தார். எனினும், டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அனுபவம் அவரிடம் இல்லை. ஆனால் அவர் நடுவராக இருந்த போது ஜோடி நெம்பர் ஒன் நிகழ்ச்சி மிகப்பெரிய டி.ஆர்.பி-யை குவித்தது. அந்தளவுக்கு சிம்புவின் செயல்பாடுகள் நிகழ்ச்சியில் பாராட்டும் படியாக இருந்தன.

www.newstm.in

Tags:    

Similar News