சிம்புவின் வசூல் சாதனை.. மாநாடு படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ தகவல்
சிம்புவின் வசூல் சாதனை.. மாநாடு படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ தகவல்
படப்பிடிப்பு தொடங்கியது முதல் பல போராட்டங்களை சந்தித்தது மாநாடு திரைப்படம். ஒருவழியாக அனைத்தையும் முறியடித்து நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியானது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ஹிட் அடித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2010 இல் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா ஹிட்டானது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சிம்புவுக்கு வசூல் சாதனை அமைந்துள்ளது. அவரது முந்தைய வெற்றிப்படங்களான மன்மதன், விண்ணைத் தாண்டி வருவாயா படங்களைவிட மாநாடு வசூலில் பட்டையை கிளப்புகிறது. வெற்றி பெற்றதால் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் மாநாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஹாலிவுட்டின் எட்டர்னல்ஸ் திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநாடு படத்தின் முதல் இருதின வசூல் எவ்வளவு என்று ஆளாளுக்கு ஒரு தொகையை கூறிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. மாநாடு திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் 14 கோடிகளை வசூலித்துள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது சிம்புவின் முந்தைய வெளியீடான ஈஸ்வரன் படத்தின் மொத்த வசூலைவிட அதிகம். இன்றும் நாளையும் இதே வேகத்தில் படம் வசூலித்தால், வார இறுதியில் 28 கோடிகளை படம் தாண்டும். இதுவே சிம்புவின் திரைவாழ்க்கையில் அதிகபட்ச வசூலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in