சிராஜ் பந்துவீச்சில் தலையில் காயம்.. மயங்க் அகர்வால் முதல் டெஸ்டில் இருந்து விலகினார் !!
சிராஜ் பந்துவீச்சில் தலையில் காயம்.. மயங்க் அகர்வால் முதல் டெஸ்டில் இருந்து விலகினார் !!
பயிற்சியின் போது முகமது சிராஜ் வீசிய பந்து தலையில் தாக்கியதில் கிழே விழுந்த மயங்க் அகர்வால் முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அதன்பின்னர் இந்திய அணி இங்கிலாந்திலேயே தங்கியிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை மறுநாள் நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் விலகியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மயங்க் அகர்வால் இன்று வலை பயிற்சியில் பேட்டிங் செய்யும் போது பந்து தாக்கி ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விளக்கம் அளித்துள்ளது.
அதில், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இன்று நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் வலை பயிற்சியில் பேட்டிங் செய்யும் போது சக வீரர் முகமது சிராஜின் பந்து வீசியுள்ளார். அவர் வீசிய பந்து மயங்க் அகர்வால் தலையில் ஹெல்மெட் மீது அடித்ததில் காயம் ஏற்பட்டது.
இதனால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து மயங்க் அகர்வால் விலக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. முகமது சிராஜின் பந்து தலையில் பட்டு அகர்வால் அதிர்ச்சி அடைந்து கிழே அமர்ந்தார். இதனையடுத்து பயிற்சியாளர்கள், சக வீரர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர். மருத்துவக்குழுவினர் முதலுதவி அளித்தனர். அப்போது பெரியளவில் காயம் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.
எனினும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் இரண்டு நாட்களில் தொடங்கும் முதல்டெஸ்டில் மயங்க் அகர்வால் களமிறங்கமாட்டார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புள்ளது.
NEWS 🚨- Mayank Agarwal ruled out of first Test due to concussion.
— BCCI (@BCCI) August 2, 2021
The 30-year-old is stable and will remain under close medical observation.
More details here - https://t.co/6B5ESUusRO #ENGvIND pic.twitter.com/UgOeHt2VQQ
newstm.in