விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண் சிரிஷா பண்ட்லா..!

விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண் சிரிஷா பண்ட்லா..!

Update: 2021-07-06 05:45 GMT

பிரிட்டன் கோடீசுவரர் ரிச்சர்டு பிரான்சன் அமெரிக்காவில் விர்ஜின் கேலக்டிக் என்னும் பெயரில் விண்வெளி முகமை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சோதனை முயற்சியின்  ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் யூனிட்டி 22 என்கிற விண்கலத்தை அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11-ம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.  பிரான்சனுடன் சிரிஷா பண்ட்லா, பெத் மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக சிரிஷா பண்ட்லா இருக்கிறார். விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பண்டாலா பெற்றுள்ளார்.

31 வயதான சிரிஷா பண்ட்லா இந்தியாவில் பிறந்த 2-வது நபராகவும், தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் இருப்பார். ஆந்திராவின் தெனாலியில் தனது முன்னோர்களை கொண்ட விண்வெளி பொறியாளர் ஆவார். ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக்கு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார்.

கல்பானா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள சிரிஷாவுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News