ஒடிடி-யில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
ஒடிடி-யில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
கோலமாவு கோகிலா, மான்ஸ்டர் படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் எடுத்து முடித்துள்ள படம் ‘டாக்டர்’. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் படத்திற்கு பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா...’ என்கிற பாடல் கடந்தாண்டே வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இதனால் டாக்டர் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது.
கடந்தாண்டே இப்படம் வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா முதல் அலையினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு, தியேட்டர்கள் இயங்குவதற்கு தடை உள்ளிட்ட காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
பிறகு இந்தாண்டு மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட முடிவு எடுக்கப்பட்டது. சட்டசபை தேர்தல், அதை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற பிரச்னைகளால் டாக்டர் படத்தில் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனால் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக பிரபல ஒடிடி நிறுவனங்களுடன் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கொரோனோவால் ஓராண்டிற்கு மேல் படம் வெளியாகாமல் இருப்பதால் தயாரிப்பாளருக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில் இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்(Disney+ Hotstar) ஒடிடி தளத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விரைவில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு திரையில் டாக்டர் படம் கண்டு ரசிக்கலாம் என நம்பிய ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
LetsOTT Exclusive: Siva Karthikeyan’s #Doctor flies to Disney+ Hotstar for a DIRECT OTT release.
— LetsOTT GLOBAL (@LetsOTT) June 28, 2021
Tamil | Telugu | Malayalam | Kannada. pic.twitter.com/5bJRg7ic6v