சிவகார்த்திகேயனின் டாக்டர்’ படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்!
சிவகார்த்திகேயனின் டாக்டர்’ படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்!
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து திரையரங்குகளில் திரைப்படங்களின் ரிலீஸ்தேதி தள்ளி வைக்கப்படுகிறது .அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வந்தது.
இதன்படி ‘டாக்டர்’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு திரைக்கு வர இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரம்ஜான் பண்டிகைக்கு டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் .அதுவரை உள்ள நேரத்தில் படத்தை மெருகேற்ற இருப்பதாகவும் தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.