சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொலை விவகாரம்.. வடமாநிலத்தவர் கைது

சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொலை விவகாரம்.. வடமாநிலத்தவர் கைது

Update: 2020-01-24 12:01 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் பிரித்திகா(8) கடந்த 20ஆம் தேதி வழக்கம்போல் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சிறுமி, சற்று நேரத்திற்கு பின் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து அடுத்த நாள் காலையில் முட்புதர்களுக்கு நடுவே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 பேரிடம் போலீசார் 3 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் சிறுமி தந்தையுடன் பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வந்ததாகவும், அதன் பழக்கத்தில் சிறுமியின் தந்தையை பார்க்க அடிக்கடி அவர் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நாளான்று பாதியிலேயே மஜம் அலி பணியில் இருந்து திரும்பியுள்ளார். இரவு முழுவதும் தான் தங்கியிருந்த இடத்திற்கு செல்லாமல், காலையில் சென்றது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். விசாரணை அடிப்படையில் மஜம் அலி கைது செய்யப்பட்டதாகவும் மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர். 

newstm.in

Tags:    

Similar News